யாழில் மனைவி கையால் தேநீர் அருந்திய கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - தீவிரப்படுத்தப்படும் விசாரணை
யாழ்ப்பாணத்தில், குடும்பத் தகராறு காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (18.04.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண்ணின் கணவர் கடந்த 18ஆம் திகதி வீட்டிற்கு வந்துள்ளார்.
மனைவிக்கு நேர்ந்த சோகம்
அப்போது, மனைவி தேநீருடன் ரோல்ஸ் ஒன்றையும் வழங்கியுள்ளார். கணவர் தேநீரை அருந்தியிருந்தாலும், மனைவி தயாரித்த உணவை சாப்பிடவில்லை என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஏற்பட்ட தகராறின்போது கணவர் மனைவியை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குப் பின்னர், கணவர் இல்லாத நேரத்தில் குறித்த பெண் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார்.
பின்னர் அவர் படுகாயமடைந்த நிலையில் கணவரால் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று (19) அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது மரணம் தொடர்பான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டு வருகிறார்.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam