ஐரோப்பா அனுப்புவதாக கோடிக்கணக்கான ரூபாவை ஏமாற்றிய பெண்
ஐரோப்பிய நாடொன்றுக்கு அனுப்புவதாக பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை எதிர்வரும் எட்டாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ருமேனியாவில் (Rumenia) வேலை வாங்கித் தருவதாகக் கூறி 8 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தை (Maligawatte) - லக்விரு செவன வீடமைப்புத் தொகுதியில் மறைந்திருந்த பெண் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
பண மோசடி
குறித்த சந்தேக நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்று தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

எனினும் அனுமதிக்கப்படாத பணியிடங்களுக்கு அனுப்புவதாக கூறி சந்தேகநபர் பணம் பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri