வைத்தியர் வீட்டில் திருடி மாட்டிய பெண்: விசாரணையில் சிக்கிய திடுக்கிடும் தகவல்
தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரின் வீட்டை உடைத்து, வைத்திய உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களைக் கொள்ளையடித்த மூவர் அடங்கிய கும்பலை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களைத் தடுப்புக்காவலில் வைத்துப் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து பெண் மீட்கப்பட்ட சம்பவம்: வேலையின்றி சொத்து சேர்த்துள்ள சந்தேகநபர்களின் உறவினர்கள்..!
இந்தக் கொள்ளைக் கும்பலை 27 வயதுடைய 'அங்கொட ரோசி' என அழைக்கப்படும் பெண்ணே வழிநடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. இவர் ஐஸ் போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸார் தீவிர விசாரணை
இந்நிலையில், இந்த கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நவகமுவ, கடுவலை மற்றும் அங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நான்கு மோட்டார் சைக்கிள்களைத் திருடி விற்பனை செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

திருடப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்களில் இரண்டு, அங்கொட பகுதியிலுள்ள பாழ் நிலம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 16 ஆம் திகதி முல்லேரியா பகுதியில் சந்தேகநபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் மூலமே, குறித்த பெண் மற்றும் அவரது கும்பல் குறித்த இரகசியத் தகவல்கள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தீவிரமடையும் மோதல்: எரிபொருள் இறக்குமதிக்கு பாதிப்பு..! அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam