கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரிடம் சிக்கிய பெண்
சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 35 இலட்சத்து 86 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் இன்று (7) இடம்பெற்றுள்ளது. பொல்கஹவெல, பொத்துஹெர பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று (7) காலை 07.55 மணியளவில் துபாயிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவரின் பயணப்பொதிகளிலிருந்து 35,860 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவரது கணவர் துபாயில் வசிப்பதாகவும், இவர் இதற்கு முன்னர் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
இந்நிலையில் சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவரை எதிர்வரும் 12 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam