யாழில் அடித்துக் கொல்லப்பட்ட பெண்: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் கைது
யாழில் குடும்பப் பெண்ணொருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபரை யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (16.02.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர் அத்தியடி பகுதியை சேர்ந்த 55 வயதுடைய பெண் பிள்ளையின் தாயே 12ஆம் திகதி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது
இந்நிலையில், தமது வீட்டுக்கு, வீட்டு வேலைகளை செய்வதற்கும், ஆடுகளுக்கு குழைகள் வெட்ட ஒருவர் வந்திருந்ததாகவும், பிறகு தனது தாயிற்கும் குறித்த நபருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தனது தாய் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகள் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதேவேளை சமூக பாகுபாட்டை சுட்டிக்காட்டி பேசியதனால் ஏற்பட்ட சடுதியான கோபத்தினால் பெண்ணை தாக்கியதாக சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாக்குமூலம்
இதற்கமைய உயிரிழந்த பெண்ணுடன் 10 ஆண்டுகளாக நட்பு உறவாடி வருவதாகவும், அவர்கள் வீடு மாறுவதற்கு உதவுவதிலிருந்து பல உதவிகளை வழங்கி வந்ததாகவும், அண்மையில் கோப்பாயில் ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு அவரது காணி ஒன்றை விற்பனை செய்து பணத்தை வழங்கியதாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சமூக வேறுபாடு
இந்நிலையில் தனது வீட்டில் கூலிக்கு வேலைக்கு போவதாக அறிந்தால் பிரச்சினை என நான் கூறிய போது, அவர் என்னை சமூக வேறுபாடு சொல்லி பேசியதால் அவரை கட்டையால் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
