நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகள் (video)
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பொக்கனைப் பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ஏற்கனவே பல தடவைகள் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும் தொடர்ச்சியாக
சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கை
இந்நிலையில் இன்றைய தினம்(02.03.2023) கோப்பாய் பொலிஸார் 38 வயதுடைய குறித்த பெண்ணை கைது செய்துள்ளதோடு அவரிடமிருந்து விற்பனைக்கு தயாராக இருந்த 6 லீட்டர் கசிப்பினையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஞ்சா நுகர்ந்த மூவர்
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் சந்தி பகுதியில் பொது வெளியில் கஞ்சா நுகர்ந்த மூவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் திருநெல்வேலி மற்றும் ஜோகபுரம் பகுதியை சேர்ந்த 30 வயதுக்கு குறைந்தவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவு கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இராணுவ சிப்பாய்களுக்கு இடையூறு
நீர்வேலி பகுதியில் துவிச்சக்கரவண்டியில் ரோந்தில் சென்ற இராணுவத்தினரின் மீது, மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை குறுக்கே விட்டு இடையூறு விளைவித்திருந்தனர்.
கோப்பாய் சந்தியில் உள்ள இராணுவமுகாமில் கடமை புரியும் இராணுவத்தினர் மீதே குறித்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரினால் பூதர் மடம் மற்றும் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்தி-கஜிந்தன்





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
