ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது (Video)
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேசத்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று மாலை கிரான் கோயில் வீதியில் உள்ள வீடு ஒன்றை மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி. எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸார் முற்றுகையிட்டனர்.
இதன்போது வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரைக் கைது செய்ததுடன் அவரிடமிருந்து 510 மில்லிக்கிராம் ஹெரோயின், 610 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட பெண்ணை வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
