கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் போதைமாத்திரைகளை உட்கொண்டு அவற்றை கடத்த முயன்ற வெளிநாட்டுப் பெண் ஒருவரை இலங்கை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 38 வயதான மடகாஸ்கர் நாட்டை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவர் சுமார் 75 கொக்கைன் எனப்படும் போதைப்பொருள் பக்கெற்றுக்களை விழுங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதன் மதிப்பு சுமார் ரூ. 35 மில்லியன் ஆகும். கொக்கைன் எனப்படும் போதைப்பொருளை மாத்திரைகள் வடிவில் சிறு பொதிகளாக சுற்றி விழுங்கியுள்ளார்.
இதனையடுத்து அவர் விழுங்கிய போதைப்பொருள் மாத்திரைகளை பிரித்தெடுப்பதற்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் உடலில் இருந்து விழுங்கப்பட்ட போதைப்பொருள் காப்ஸ்யூல்கள் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைக்காக அவர் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
மிக தீவிரமான நிலை! எல்லையை நோக்கிப் பாய்ந்த நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் : ஈரானின் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலின் அறிவிப்பு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
அமரன் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன், கமல்ஹாசன்... வெளிவந்த ஃபஸ்ட் லுக் Cineulagam
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan