யாழில் சூட்சுமமான முறையில் சட்டவிரோத மதுபானத்தை பொதி செய்த பெண் கைது
யாழ். சுன்னாகம் பகுதியில் சூட்சுமமான முறையில் சட்டவிரோத மதுபானமான கசிப்பினை பொதி செய்து கொண்டிருந்த பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் பூதராயர் கோயிலடி பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு இன்றையதினம் (17.04.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரின் சுற்றிவளைப்பில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் நடவடிக்கை
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து பத்தாயிரம் மில்லிலீட்டர் கசிப்பும் அதனை பொதி செய்ய பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், குறித்த பெண்ணை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
