பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் ஹட்டனில் கைது
ஹட்டன் (Hatton) நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைவாக சந்தேக நபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (09) பிற்பகல் ஹட்டன் தொடருந்து நிலையத்திற்கு அருகில், ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பதுளை, கந்தேகெதர பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை ஏமாற்றி, கவர்ச்சிகரமான வட்டிக்கு பணம் தருவதாக பேஸ்புக்கில் விளம்பரம் செய்து, சுமார் 4.5 மில்லியன் ரூபாவைப் பெற்று, பணத்தை செலுத்தாமல் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

46 வயதில் கர்ப்பம்: வயிற்றில் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட சங்கீதா- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மகனின் திருமண வரவேற்பில் எடப்பாடிக்கு பிரம்மாண்ட ஏற்பாடு.., எஸ்.பி வேலுமணி போடும் திட்டம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சி எப்போது தெரியுமா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் Cineulagam
