யாழில் பெண் உட்பட இருவர் சட்டவிரோத மதுபானத்துடன் கைது
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில், ஆறாயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் பெண் ஒருவர் நேற்று(22.12.2022) கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை நேற்று முன்தினம் (21.12.2022) அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்லை வீதியில் உள்ள வீடு ஒன்றில் கசிப்பினை மறைத்து வைத்திருந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கை

இதன்போது அவரிடமிருந்து 20 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் ஆயிரத்து ஐந்நூறு மில்லிமீட்டர் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளன.
இரண்டு கைது நடவடிக்கைகளும் காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த குழந்தையா இது!! சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவர் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க! சமீபத்திய புகைப்படம்.. Cineulagam
சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! Manithan