தெஹிவளையில் 600 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்த பெண் கைது
தெஹிவளை பிரதேசத்தில் பெண் ஒருவர் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
5 வங்கி கணக்குகள் நடத்தி சென்று 4 வருடங்களுக்குள் அந்த கணக்கு ஊடாக 600 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வங்கி கணக்குகள் போதை பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய என தகவல் வெளியாகியுள்ளதென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 41 வயதுடைய பெண் என தெரியவந்துதுள்ளது. அவர் பணம் தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
பிரதேச ரீதியில் போதை பொருள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மற்றும் போதை பொருளுக்கு அடிமையானவர்கள் இந்த பெண்ணின் வங்கி கணக்கில் பணம் வைப்பு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri