உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்ணிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பெண்ணை பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் ஏனைய 11 பேரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.
இவ் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள், சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 66 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குதல்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸார் வழக்கு தாக்கல் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று (29.11.2022) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு
விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது சிறைச்சாலையில் இருந்து பெண் ஒருவரை அழைத்து வந்த நிலையில் அவரை சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய பிணையில்
செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 6 மணி நேரம் முன்
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்