கொழும்பில் கைது செய்யப்பட்ட ஆணும் பெண்ணும் - விசாரணையில் வெளியான பல தகவல்கள்
கொழும்பில் ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
போதைப்பொருள் விற்பனை மூலம் சட்டவிரோதமான முறையில் ஈட்டிய பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.
பொரளை பகுதியை சேர்ந்த 43 வயதான ஆணும் பெண்ணும் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைப் பிரிவு
இந்நிலையைில் சந்தேக நபர்களுக்கு சொந்தமான கொழும்பிலுள்ள இரண்டு வீடுகள் மற்றும் ஆடம்பர கார்கள், பணமோசடிச் சட்டத்தின் கீழ் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

சந்தேகநபர்கள் நேற்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இது தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
முகேஷ் அம்பானியிடம் இருந்து ரூ 2.6 லட்சம் கோடி இழப்பீடு கோரும் இந்தியா... தீர்ப்பு மிக விரைவில் News Lankasri