கொழும்பில் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுகொலை - பின்னணியில் சிக்கியப் பெண்
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கஞ்சிபானி இம்ரானின் உறவினரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குற்றத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்ததாக பெண் ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கைது நடவடிக்கைகள், மாளிகாவத்தை சங்கராஜ மாவத்தையில் கடந்த 10ஆம் திகதியன்று இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடையவையாகும்.
பின்னணியில் சிக்கிய பெண்
கொழும்பு 15 ஐச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரையும் 23 வயதுடைய யுவதி ஒருவரும் இந்த சம்பவத்திற்கு உதவி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் நேற்று கொழும்பு வடக்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த இருவரும் ஐஸ் போதைபொருள் 25 கிராம் 840 மில்லிகிராம் போதைப்பொருளை வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றொரு தனித்தனி நடவடிக்கையில், கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மட்டக்குளி, தொம்பே மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19, 25 மற்றும் 28 வயதுடைய மேலும் மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.
மூன்று சந்தேகநபர்களிடமிருந்தும் 12 கிராம் 380 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS..
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 16 மணி நேரம் முன்
ஆறு மாதங்களில் 40,000 புலம்பெயர்ந்தோர்: சுவிட்சர்லாந்திருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு News Lankasri