இந்திய பிராந்திய வல்லரசின் அனுசரனையின்றி தமிழர்களுக்கு ஒரு போதும் தீர்வு எட்டப்படாது: சிறீதரன் எம்.பி (Video)
“சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையும் அதனை அடைவதற்கான பகடைக்காய்களாக ஈழத் தமிழர்களையும் பயன்படுத்த நினைக்கிறது”என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கரைச்சி பிரதேச சபையின் பண்பாடு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வாழ்த்து தெரிவித்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மோடியின் தீர்க்க தரிசனமான உரை

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்று பெற்றுத் தரவேண்டும் என்ற எண்ணத்தை ஒரு போதும் சீனா கொண்டிருக்கவில்லை.
இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றிய நாடாளுமன்ற உரையில், இலங்கைக்கு கூட்டுறவு சமஸ்டி முறையில் தீர்வு காண்பது சிறந்தது என்ற தீர்க்க தரிசனமான உரையினை ஆற்றி இருந்தார்.
இந்திய பிராந்திய வல்லரசின் அனுசரனை

இதன் மூலம் உணர்த்துவது என்னவெனில் ஈழத் தமிழர்களுக்கான இனப் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதாக இருந்தால் அது இந்தியா ஒன்றினாலேயே முடியும் என அவரது உரை வெளிச்சம் இட்டு காட்டுகின்றது.
ஆகவே இந்திய பிராந்திய வல்லரசின்
அனுசரனையின்றி தமிழர்களுக்கு ஒரு போதும் தீர்வு எட்டப்படாது என்பது நிதர்சனமான
உண்மை.”என கூறியுள்ளார்.