மியன்மார் இராணுவ ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் - கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Myanmar
By Independent Writer Mar 20, 2021 08:59 PM GMT
Independent Writer

Independent Writer

in உலகம்
Report

மியன்மார் இராணுவ ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் எனவும், மியன்மாரில் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழவின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பொது அமைப்புகள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்றைய தினம் மேற்கொண்டுள்ளன.

  இவ் ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சிவில் அமைப்புகள், போரினால் பாதிக்கப்பட்ட சமூகப் பிரிவினர், பெண்கள் அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டம் தொடர்பிலான ஊடக அறிக்கையும் வெளியிடப்பட்டதுடன், இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர்களுக்கு இவ்வறிக்கை சமர்ப்பித்தற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

அந்தவகையில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அதிகாரி ஆகியோருக்கு இவ்வறிக்கை அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.

அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இதன் போது மியன்மார் இராணுவ ஜுன்டா ஆட்சியுடன் கொண்டுள்ள அனைத்துவிதமான உறவுகளையும் பரிமாற்றங்களையும் நிறுத்துமாறு இலங்கை அரசைக் கோருகிறோம்.

மனித உரிமைகளை மீறுவதில் மிகவும் அபகீர்த்திக்குள்ளான அரசுகளில் ஒன்றாக ஆசியாவிலும் உலக அளவிலும் மியன்மார் அரசு உருவாகியுள்ளது.

2021 மாசி மாதம் 1ம் திகதி,மூத்த இராணுவ ஜெனரல் மின் ஆங் லாயிங் மற்றும் அவரின் இராணுவம் மியன்மாரில் ஜனநாயகமாகத் தெரிவுசெய்யப்பட்ட தேசிய ஜனநாயக லீக் தலைமையிலான அரசை இராணுவ சதியின் மூலம் கைப்பற்றியதோடு, மக்களின் தலைவர்களான ஆங் சாங் சூகி, நாட்டின் ஜனாதிபதி திரு வின்மையின்ட் அடங்கலான பல தலைவர்களையும் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர்.

நாட்டின் தலைநகரான யங்கூன் மின்சார வெட்டால் இருளில் மூழ்கடிக்கப்பட்டதோடு நாடுமுழுவதும் வலைத் தொடர்புகள் முடக்கப்பட்டன.

மக்கள் வீதிகளில் இறங்கி தமது தலைவர்களை விடுவிக்குமாறு கோரி போராட்டம் செய்ததோடு தமது ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தனர்.

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை சார்ந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள மியன்மார், இராணுவம் அமைதியாகப் போராடியவர்களுக்கு எதிராகக் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டது.

இதுவரையில் 120க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டிருப்பதுடன் பலர் காயப்பட்டுள்ளனர். இளம் பெண்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் காயப்பட்டுள்ளனர்.

படுகொலைக்குள்ளானோரில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் 25 வயதுக்கும் குறைந்தவர்களாகும். 2000 இற்கும் மேற்பட்டோர் எதேச்சாதிகாரமாகக் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெண்களும் அடங்குவர். காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தமது குடும்பத்துடன் தொடர்பு கொள்ளவோ சட்டத்தரணிகளை அணுகவோ அனுமதிக்கப்படவில்லை.  

கைது செய்யப்பட்ட தமது பிள்ளைகள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என பலகுடும்பத்தினருக்குத் தெரியாது. போராட்டக்காரர்களுக்கும் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் எதிராக இராணுவம் சித்திரவதைகளையும் அட்டூழியங்களையும் மேற்கொண்டு வருகிறது.

ஜ.நா. செயலாளர் நாயகம் அன்ரோனியோ குற்றரர்ஸ் அவர்கள், மியன்மாரில் நடைபெறும் அட்டூழியங்களைக் கண்டித்துள்ளதோடு சிவில் ஆட்சி முறைமைக்குத் திரும்புமாறு கோரியுள்ளார்.

மியன்மாருக்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் தோமஸ் அன்ருஸ் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றும் போது, மியன்மார் நாடானது ஒரு கொலைகார, சட்டப்பூர்வமற்ற ஆட்சியினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மனிதக்குலத்துக்கு எதிரான குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தடைகளைப் பிறப்பிக்குமாறும் கேட்டுள்ளார். ஜ.நா. பாதுகாப்புச் சபையானது தனது தலைமைத்துவ அறிக்கையில், மியன்மாரின் வீழ்ச்சியுறும் நிலவரம் குறித்து ஆழ்ந்த கரிசணைகளை வெளிப்படுத்தியிருப்பதோடு,அமைதியான போராட்டக்காரர்கள் மீதான வன்முறைகளைக் கடுமையாகக் கண்டித்திருப்பதுடன் ஜனநாயகத்துக்குத் திரும்புமாறு கோரியுள்ளது.

அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நால்வர் அணி நாடுகள், தாம் மியன்மாரில் ஜனநாயகத்தை மீள ஸ்தாபிக்கக் கூட்டாகச் செயற்படுவதாக பிரகடணப்படுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மியன்மார் இராணுவ சதிக்குப் பொறுப்பான பத்து பேருக்கு எதிராக அமெரிக்கா தடைகளைப் பிறப்பித்துள்ளது. இதில் இராணுவத்துக்கு நெருக்கமான மூன்று கம்பனிகளும் அடங்கும். ஐக்கிய இராச்சியம் மூன்று ஜெனரல்களுக்கு எதிராகத் தடைகளைப் பிறப்பித்துள்ளது.

மியன்மாரில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதைத் தான் கவனத்திற்கெடுத்துள்ளதாகவும், அந்த நாட்டுக்கான இராணுவ – தொழில்நுட்ப உதவிகளை நிறுத்துவதற்கு யோசிப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

மியன்மார் இராணுவ சதியைக் கண்டித்து தென்கொரியா நாடாளுமன்றம் தீர்மானமொன்றை நிறைவேற்றியிருப்பதோடு, ஜனநாயகத்துக்குத் திரும்புமாறும் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்குமாறும் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் உலகின் ஜனநாயக நாடுகளும் மியன்மார் இராணுவ ஜுன்டா தலைமையின் அட்டூழியங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதுடன், சிவில் ஆட்சிக்குத் திரும்புமாறு கோரிவருகின்றன.

இலங்கையின் சிவில் அமைப்பினரும், பொதுமக்களுமான நாம் ஐ.நா.வுடனும் உலகின் ஜனநாயக நாடுகளுடனும் கூட்டிணைந்து மியன்மாரில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும், மியன்மாரின் கொலைகார, சட்டப்பூர்வமற்ற இராணுவ ஆட்சியுடன் உறவாட வேண்டாம் என்றும் இலங்கை அரசுக்கு வலியுறுத்துகிறோம்:

மியன்மாரில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஐ.நா. பொதுச்சபையிலும், மனித உரிமைகள் பேரவையிலும் பரிந்துரை செய்யுமாறு நாம் இலங்கை அரசைக் கோருகிறோம். சார்க் நாடுகளையும் மக்களையும் மியன்மார் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்குமாறும் இராணுவ ஜுன்டா ஆட்சியுடன் உறவாட வேண்டாம் என்றும் நாம் வலிந்துரைக்கிறோம்.

மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் ஆட்சியதிகாரத்திலிருந்து இறங்கி ஜனநாயகமாகத் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை ஒப்படைக்கவும் மற்றும் மதச் சிறுபான்மையினரின் அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தவும்,மியன்மாரில் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கவும் வேண்டுமென நாம் ஐ.நா.வையும் சர்வதேச சமூகத்தையும் கோருகிறோம் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US