அமெரிக்காவைத் தாக்கி வரும் உக்கிரமான குளிர்காலப் புயல்: பல மில்லியன் பேர் பாதிப்பு
அமெரிக்காவைத் தாக்கி வரும் உக்கிரமான குளிர்காலப் புயல் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் 160 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்தப் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வோஷிங்டன், பிலடெல்பியா மற்றும் நியூயோர்க் போன்ற நகரங்களில் 12 அங்குலத்திற்கும் அதிகமான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
கடும் பனி
ஆர்க்டிக் காற்றினால் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழ் (சுமார் -50°F / -46°C) சென்றுள்ளது.

இதனால் "ஹைப்போதெர்மியா"மற்றும் தோல் உறைவு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடும் பனி மற்றும் பனிக்கட்டிகளால் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
விமானங்கள் ரத்து
ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில்,வார இறுதி நாட்களில் வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

டெக்சாஸ், நார்த் கரோலினா,ஜோர்ஜியா உள்ளிட்ட பல மாநிலங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளுக்காகத் தேசிய பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri