திருகோணமலையில் அதிகரித்துள்ள காற்றின் வேகம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
திருகோணமலையில் இன்று (08.01.2026)காற்றின் வேகம் அதிகமாக உள்ளது.இதனால் கடலில் அலைகள் சீற்றமாக வீசுவதனை அவதானிக்க முடிகிறது.
கடற்றொழிலாளர்கள் தொழில் நிமித்தம் கடலுக்கு செல்வதாயின் அவதானமாக செயற்படுமாறும் கூறப்படுகிறது.
மழை வீழ்ச்சி
நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு,ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை இன்று (08) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

