கப்பம் பெற்ற ஜனாதிபதியின் டிஜிட்டல் ஆலோசகர்! விமல் திட்டவட்டம்
ஜனாதிபதியின் டிஜிட்டல் ஆலோசகர் ஹான்ஸ் டிஜிட்டல் அடையாள அட்டையை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தரகராக செயற்பட்டு இந்தியாவிடம் கப்பம் பெற்றுக் கொண்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் டிஜிட்டல் ஆலோசகர் ஹான்ஸே டிஜிட்டல் அடையாள அட்டையை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்காக முன்னின்று செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டிஜிட்டல் அடையாள அட்டை
அத்தோடு, அவர் அரசாங்கத்தில் சம்பளம் பெற்றுக் கொள்லாமல் இந்தியாவிடம் கப்பம் பெற்றுள்ளார்.
கடந்த ஜுலை 25 ஆம் திகதி டிஜிட்டல் அடையாள அட்டைக்கான டெண்டருக்கு விண்ணப்பித்துள்ள இந்திய தனியார் நிறுவனங்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் மாநாடு ஒன்றை நடத்தியது.
அதில் இலங்கை டிஜிட்டல் அமைச்சும் கலந்து கொண்டது. அமைச்சின் செயலாளர் வருணதனபால குறித்த மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராயலம் சென்று கலந்து கொண்டுள்ளார்.
அது தொடர்பான காணொளி ஒன்றைத் தலைவர் விமல் வீரவன்ச ஊடக மாநாட்டின் போது ஊடவியலாளர்களுக்கும் காட்டினார்.
மாநாடு
மேலும் அதில் எட்காவின் நிறைவேற்று அதிகாரி சன்ஜே கருணாதிலக்க மற்றும் ஜனாதிபதியின் டிஜிட்டல் ஆலோசகர் ஹான்ஸ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த மாநாட்டில் எங்கிருந்தும் பங்குபற்றலாம். ஆனால் டிஜிட்டல் அமைச்சின் செயலாளர் ஏன் இந்திய உயர்ஸ்தானிகராலயம் சென்றார் என கேள்வியும் எழுப்பினார்.
குறித்த மாநாட்டில் இந்திய தனியார் நிறுவனங்கள் கேட்ட கேள்விகளுக்கு The National Institute for Smart Government (NISG) என்ற இந்திய அரச நிறுவனமே அனைத்து பதில்களையும் வழங்கியுள்ளன.
இலங்கை சார்பில் கலந்து கொண்ட எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 22 மணி நேரம் முன்

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
