திருகோணமலை சிறைச்சாலைக்கு சென்ற விமல் வீரவன்ச
திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பலாங்கொடை கஸ்ஸப தேரரின் சுகவீனம் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சென்றுள்ளார்.
கஸ்ஸப தேரர் நேற்றுமுன்தினம் (14) முதல் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று (15) மாலை கைவிட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சந்தர்ப்பத்தில் இன்று (16.01.2026)திருகோணமலை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.மேலும் அவரை பார்ப்பதற்காக சீலரத்தன தேரரும் திருகோணமலை சென்றுள்ளார்.
திருகோணமலை டொக்கியாட் கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோத கட்டுமானங்களை மேற்கொண்டமை மற்றும் புத்தர் சிலையை வைத்து அமைதியற்ற சூழலை உருவாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 11 பேருக்கு எதிராக துறைமுக பொலிஸாரால் வழக்குத் தொடரப்பட்டது.

இது தொடர்பான விசாரணையின் போது, பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 4 பிக்குகளும் 5 சிவிலியன்களுமாக மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri