சிஐடியில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்கு அழைப்பு
முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவை, குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்காக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை..
என்ன விடயம் தொடர்பிலான விசாரணை என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
கடவுச்சீட்டு மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மீது சுமத்தப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை செய்து வரும் தம்மை கைது செய்ய முயற்சிக்கப்படுவதாக அண்மையில் விமல் வீரவன்ச கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




