பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க முடியாது என கூறும் விமல்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, தங்காலை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெலியத்த சனா, மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி) தீவிர உறுப்பினர் என வீரவன்ச வெளியிட்ட பொது அறிக்கை தொடர்பான 2ஆம் கட்ட விசாரணைக்காக, இன்று(12.10.2025) முற்பகல் 10 மணிக்கு தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், மீண்டும் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க மாற்று திகதியை அவர் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
வாக்குமூலம்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இதே சம்பவம் தொடர்பாக ஒக்டோபர் 9ஆம் திகதியும் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri
