ஹரிணியை விரட்டிய எதிர்க்கட்சித் தலைவர் யார்...! அரசியல் குழப்பத்தை ஏற்படுத்திய ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் குறித்து சில உரையாடல்களும் எழுந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நேரத்தில், ரணில் திடீரென்று அவரிடம், “நான் எதிர்க்கட்சித் தலைவரிடம் சிறிது நேரத்திற்கு முன்பு பேசினேன்” என குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு நண்பர், “நீங்கள் இப்போதுதான் சஜித்துடன் பேசினீர்களா?” என்று கேட்டார். ரணில், அதை உணராமல், “சஜித்தா? நான் விமலுடன் பேசினேன் என குறிப்பிட்டுள்ளார்.
தொலைபேசி அழைப்பு
இப்போது எதிர்க்கட்சித் தலைவர் விமல் அல்லவா? ஹரிணியை விரட்டியடித்தவர் அவர்தான்” என ரணில் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் நேற்று மாலை விமலுக்கு உண்மையாகவே தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது.
“இப்போது நீங்கள் தானே எதிர்க்கட்சித் தலைவர். ஹரிணியை அடக்கிய மந்திரம் என்ன?” என ரணில் விமலிடம் வினவியுள்ளார்.
பின்னர் இருவரும் மிகவும் நட்பான உரையாடலை நடத்தினர். ஹரிணியின் கல்வி சீர்திருத்தத்தை திரும்பப் பெற விமல் மேற்கொண்ட போராட்டத்திற்காக ரணில் அவரை மிகவும் பாராட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.