எதிர்பாராத திருப்பங்களுடன் சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்! தீர்மானத்தை அறிவித்த விமல் வீரவங்ச
இலங்கையின் அடுத்த ஜனாதிபதிக்கான தெரிவு நாளைய தினம் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள நிலையில் கொழும்பு அரசியல் நிலவரம் சூடுபிடித்து வருகிறது.
ஜனாதிபதி தேர்தலில் தானும் போட்டியிடுவதாக அறிவித்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இறுதி நேரத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.
இதன்படி, இன்றைய வேட்பு மனுத் தாக்கலின் போது, டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்திருந்தார்.
அத்துடன் டலஸ் அழகப்பெருமவுக்கு அதிரவளிப்பதாக டலஸ் அழப்பெருமவுடன் இணைந்து வெளியிட்ட விசேட அறிவிப்பிலும் தெரிவித்திருந்தார்.

இதில் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்த முடிவு சற்றும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பதாக இருந்தது என பல தரப்பினராலும் கூறப்படுகிறது.
விமல், உதய குழுவின் முடிவு
இந்த சூழ்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் நாடாளுமன்றில் செயற்படும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பான தமது முடிவினை அறிவித்துள்ளனர்.

அதன்படி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாளைய நாடாளுமன்ற வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவுக்கு, விமல் வீரவன்ச தலைமையிலான சுயாதீன அணிகள் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச விடுத்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri