தமிழ் பொது வேட்பாளரை தொடர்ந்தும் ஆதரிப்பதா..! அவசரமாக கூடிய ரெலோ மத்திய குழு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரை தொடர்ந்தும் ஆதரிப்பதா, இல்லையா என்பது குறித்து தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மத்திய குழு மீண்டும் அவசரமாக கூடி ஆராய்கிறது.
வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று (24.08.2024) குறித்த கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
பொது அமைப்புக்கள்
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என 7 கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களை உள்ளடக்கி ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்தது.
எனினும், கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இது தொடர்பில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு இருந்தது.
அக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் அண்மையில் ஜனாதிபதியும், வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்தும் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது பிரதான வேட்பாளரில் ஒருவரை ஆதரிப்பதா என்பது குறித்தும் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்தும் மத்திய குழுலில் ஆராயப்பட்டு வருகின்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தம் கருணாகரன், பேச்சாளர் சுரேன் குருசாமி உள்ளிட்ட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.





புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
