இலங்கையில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படுமா?
இலங்கையில் அடுத்த வருடம் வரை நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வருமானத்தை விடவும் செலவு அதிகம் என்பதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் திலின விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாவிட்டால், நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 40 வருடங்களில் நாட்டிலுள்ள 45 சதவீதம் மக்களுக்கு நீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 4 வருடங்களில் அதனை 80 சதவீதமாக ஆக அதிகரிப்பதே தமது இலக்கு என தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
