சம்பள அதிகரிப்புக்காக உயருமா வற் வரி! மஹிந்த சிறிவர்தன விளக்கம்
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு கோரிக்கைகளை பூர்த்தி செய்ய தற்போதைய பெறுமதி சேர் வரியை 18இலிருந்து 20 - 21 வீதமாக உயர்த்துவது அவசியமாகும் என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன (Mahinda Siriwardane) இன்று (08.07.2024) அறிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள சிறிவர்தன, இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அரசாங்கம் இல்லை எனவும், அவ்வாறு செய்வது பொது மக்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

வரவுசெலவுத் திட்டம்
இந்தநிலையில், சம்பள ஏற்றத்தாழ்வுகள் குறித்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 2025 வரவுசெலவுத் திட்டம், பொதுச் சேவைகளின் சம்பளத்தை திருத்துவது குறித்து பரிசீலிக்கும் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam