சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவடையலாம்
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெற்கு இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு தொடர்பில் சுதந்திரக்கட்சியின் 14 உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுதந்திரக் கட்சி எடுத்துள்ள தீர்மானம்
ஏற்கனவே ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டுள்ள சுரேன் ராகவன் மற்றும் சாந்த பண்டார ஆகியோர் சுதந்திரக் கட்சியின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நிமால் சிறிபால டி சில்வா, சாமர சம்பத், ஜகத் புஸ்பகுமார ஆகியோர் பதில் ஜனாதிபதி ரணிலுடன் இணக்கப்பாட்டை எட்டுவது குறித்து பேச்சுவார்த்த நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்த போதிலும் பின்னர் அதனை வாபஸ் பெற்றுக்கொண்டதுடன், ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சி யாருக்கும் ஆதரவளிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.