நாடு முழுமையாக திறக்கப்படுமா ? - வெளியான தகவல்
எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை முழுமையாகத் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிடடுள்ளது.
இது உத்தியோகபற்றற்ற தகவல் எனவும், கோட்டாபய ராஜபக்க்ஷ அமெரிக்கா செல்லும்முன் நாடு திறக்கப்படுகின்ற தீர்மானம் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் அந்த ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நிறைவுக்கு வரும் என்றும், அதன் பின்னர் நாட்டின் வழமையான செயற்பாடுகளை தொடர்வது பற்றிய பரிந்துரைகளை அறிக்கையாக முன்வைக்கும் படியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணித்திருக்கின்றார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 21ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan