ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைகிறாரா ரமேஷ் பத்திரண..! செய்திகளின் தொகுப்பு
அடுத்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிதுள்ளார்.
மேலும் தான் இன்னும் மொட்டு கட்சியிலேயே அங்கம் வகிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் அவரை ஆதரிப்பின்றீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
எமது கட்சி அவ்வாறானதொரு முடிவை இன்னும் எடுக்கவில்லை. கட்சி எடுக்கும் முடிவின் பிரகாரமே எனது தீர்மானம் அமையும்.
நெருக்கடியான சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொறுப்பேற்றார். ரணிலை கட்சி ஆதரிக்க முடிவெடுத்தால் அந்த முடிவை ஏற்பேன் என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான செய்திகளுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றையநாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,