கோட்டாபயவின் வருகையால் ராஜபக்ஷ குடும்பத்திற்குள் பூகம்பம் - கடும் கோபத்தில் மகிந்த
நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து அவருக்கு பிரதமர் பதவி வழங்க வேண்டும் என மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குடும்ப உறுப்பினர்கள் குழுவிடம் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு யோசனை முன்வைத்துள்ளது.
குடும்பத்திற்குள் முறுகல்
எனினும் அதற்கு மகிந்த குடும்பத்தினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச அரசியலில் ஈடுபட்டு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்காமல் சுதந்திரமாக வாழ்வதையே இன்று செய்ய வேண்டும் என மகிந்த தெரிவித்துள்ளார்.
புறக்கணித்த நாமல்
நேற்று இரவு நாடு திரும்பிய கோட்டாபய ராஜபக்சவை வரவேற்க சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் நாமல் ராஜபக்ச அல்லது குடும்ப உறுப்பினர்கள் எவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரக்கூடாது என்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான கருத்தாகியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
