கூலி தொழிலுக்கு செல்லும் ஆசிரியர்கள்: கண் திறக்குமா அரசு..! பிரதீப் சுந்தரலிங்கம் விசனம் (Video)
மலையகத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனம் வழங்க பல போராட்டங்களை முன்னெடுத்தும் அரசு அதனை கண்டுகொள்ளவில்லை என தேசிய அமைப்பாளர் பிரதீப் சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.
தெயஹி வல தலைமை அலுவலகத்தில் மலையக ஆசிரியர் உதவியாளர் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த 2015 ஆம் ஆண்டு மலையகத்தில் 3000 பேர் ஆசிரிய உதவியாளராக நியமிக்கப்பட்டனர்.
இந்த நியமனமானது ஆசிரியர் சேவை யாப்பிற்கு முரணான நியமனம் என்றும் அவர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கி ஆசிரியர் நியமனம் வழங்கும் படி அன்றைய நல்லாட்சி அரசுக்கு அறிவித்தும் பல போராட்டங்களை நடத்தியும் கூட அதைக் கண்டு கொள்ளவில்லை.
நியமனம் பெற்று 8 வருடங்கள் கடந்த நிலையில் தொடர்ந்து 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவில் பாரிய பொருளாதார சிக்கல்களுக்கு சப்ரகமுவ, மத்திய, ஊவ மற்றும் மேல் தென் மாகாணங்களில் 500க்கும் மேற்பட்ட ஆசிரிய உதவியாளர்கள் தொடர்ந்து பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
கையாலாகாத தன்மை
எனவே பொருளாதார நஷ்டத்தை ஈடு செய்ய விடுமுறை நாட்களில் கூலி தொழிலுக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளில் எங்கும் காணப்படாத சோகமான நிலை இலங்கையில் காணப்படுகின்றது. மலையக மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்று அமைச்சர்களாக இருக்கின்றவர்கள் மலையக மக்களுக்கு சேவை செய்யாமல் எவ்வித நிபந்தனைகளும் இன்றி அரசுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக கல்வி ராஜாங்க அமைச்சருக்கு பலமுறை அறிவித்தும் இதுவரை சாதகமான எந்த முடிவும் அவரால் எடுக்க முடியாமை அவரின் கையாலாகாத தன்மை இதில் வெளிப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்தில் பயிற்சியை நிறைவு செய்து பரீட்சையிலும் சித்தி பெற்ற ஆசிரியர்களுக்கான நேர்முக பரிட்சையும் நிறைவு செய்யப்பட்டு நியமனம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்யப்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
அனைத்து மாகாணத்திலும் உள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கு உடனடியாக நிரந்தர நியமனம் வழங்கப்படாவிட்டால் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க போவதாக இலங்கை ஆசிரிய சேவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் சங்கத்தில் பிரதான செயலாளர் மகிந்த ஜெயசிங்க, தலைவர் தம்மிக்க அழகப் பெருமை, தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய்யை நெருங்கிய நபரின் தலையில் துப்பாக்கியை வைத்த பாதுகாவலர் - விமான நிலையத்தில் பரபரப்பு News Lankasri

ஆசிய நாடுகள் உட்பட... சில நாட்டவர்களின் விசா அனுமதியைக் கட்டுப்படுத்த பிரித்தானியா முடிவு News Lankasri
