சிவப்பு அபாய பகுதிகளில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவீர்கள்! - மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அறிவிப்பு
மண்சரிவு அபாயம் இருப்பதாக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட போதிலும், குறித்த பகுதியில் இருந்து வெளியேறாதவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுதந்த ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
அவ்வாறானவர்களை வெளியேற்றுவதற்கு அரசாங்க அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தொற்றுநோய் மற்றும் அனர்த்த நிலைமைகளுக்கு மத்தியிலும் சுற்றுலாப் பயணங்களுக்குச் செல்லும் குழுக்களும் இருப்பதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
எச்சரிக்கைகளை மீறி எதிர்காலத்தில் அலட்சியமாக செயற்படும் இவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
