பதவி நீக்கப்படும் எரிவாயு நிறுவனத்தின் தலைவர்
லிற்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க (Theshara Jayasinghe) இன்றைய தினம் அந்த பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறுவனத்தின் புதிய தலைவராக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா (Ranuka Perera) நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயு கலவை சம்பந்தமாக நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடியை கவனத்தில் கொண்டு ஜயசிங்கவை நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனில் கொஸ்வத்த லிற்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் தெசார ஜயசிங்க அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் லிற்ரோ கேஸ் நிறுவனத்திற்கு இரண்டு தலைவர்கள் நியமிக்கப்பட்டதுடன் மூன்றாவதாக ரேணுக பெரேரா தற்போது நியமிக்கப்படவுள்ளார்.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam