திருகோணமலையில் காட்டு யானைகள் அட்டகாசம்! மக்கள் கவலை
திருகோணமலை ,மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிளிவெட்டி கிராமத்திற்குள் நேற்றையதினம் (07) அதிகாலை உட்பகுந்த காட்டு யானைகள் பயன் தரும் மரங்களை சேதப்படுத்தியுள்ளன.
இதன் போது தென்னை ,வாழை உள்ளிட்ட பல மரங்கள் காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளன.
மக்கள் கவலை
அருகிலுள்ள கிரான் குளத்தில் காணப்படும் காட்டு யானைகள் மாலை மற்றும் அதிகாலை வேளைகளில் கிராமத்திற்குள் உட்புகுந்து சேதங்களை விளைவித்து வருகின்றன. இதனால் இரவு வேளைகளில் வீடுகளில் உறங்குவதற்கும் அச்சம் கொள்வதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அருகிலுள்ள கிராமத்தில் கடந்த மாதம் யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு குடும்பஸ்தர் உயிரிழந்ததாகவும் ,இச்சம்பவம் தமது கிராமத்திலும் நடந்து விடுமோ என்கின்ற அச்சம் காணப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் அரசாங்கமானது கிராமத்திற்குள் உட்புகாத வகையில் யானைப் பாதுகாப்பு வேலி அமைத்துத்தருமாறு மூதூர் - கிளிவெட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.










மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri