கிளிநொச்சியில் காட்டு யானைகள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: தென்னை மரங்கள் சேதம்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோனாவில், யூனியன் குளம் மற்றும் அக்கராயன் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெறும் காட்டு யானை அச்சுறுத்தலால் பெருமளவான பயன் தரும் தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
யானைகளின் அட்டகாசம்
யூனியன் குளம், கோனாவில் மற்றும் அக்கராயன் பகுதிகளில் கடந்த சில நாட்களாக புகுந்த காட்டு யானைகள் நூற்றுக்கும் மேற்பட்ட பயன் தரும் தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (07.03.2026) இரவு குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்த யானைகள் 25-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழித்து சேதப்படுத்தியுள்ளன.
இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, யூனியன் குளம் பிரதேசத்தில் காட்டு யானை அச்சம் காரணமாக 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து வேறு இடங்களில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அருகில் மூழ்கிய ஈரானிய கடற்படை கப்பல் -அமெரிக்காவால் இலங்கைக்கு எச்சரிக்கை - அடுத்து நடக்கபோவது என்ன..!