ரணிலுக்கு வாக்களித்தமைக்கான காரணத்தை கூறும் விக்னேஸ்வரன்
ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த நேரத்தில் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் நிறைவேற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் அவருக்கு வாக்களித்தாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஜனாதிபதிக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பில் கலந்துக்கொள்ள சென்றிருந்த விக்னேஸ்வரன், முன்னதாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ரணில் கூறினார்

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருக்கும் போது, அவரை சந்தித்த போது நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினார்.
இதன் காரணமாகவே நாங்கள் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியாக அவரை தெரிவு செய்ய வாக்களித்தோம். தற்போது அவரை சந்தித்து நிறைவேற்றுவதாக கூறியவற்றை நிறைவேற்றுமாறு கோருவோம்.
அரசியல் சிறை கைதிகளை விடுதலை செய்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தோம். நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். விடுதலை செய்தால், அரசியல் கைதிகள் வெளியில் வர முடியும் எனவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam