கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் இருந்து அமைச்சர் பீரிஸ் வெளிநடப்பு..!

G. L. Peiris Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Ranil Wickremesinghe
By Amal Jun 05, 2022 06:53 AM GMT
Report

கோட்டா, விஜயதாசவுக்கு கடிதம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால், பசில் ராஜபக்ச ஜனாதிபதியாகக்கூடும் என்பதை தடுக்கவே, மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து பதவியில் இருப்பது நல்லது என்பதை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறார்.

இந்தநிலையில் 21வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு தனிப்பட்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

இதில் தமது சொந்தக்கருத்துக்களை கோட்டாபய குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தின் உள்ளடக்கத்துக்கு அமைச்சர் ஜி.எல் .பீரிஸூம் , ஜனாதிபதிக்கு உதவியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி  பிரதிநிதிகள் கூட்டத்தில் இருந்து அமைச்சர் பீரிஸ் வெளிநடப்பு..! | Wickremesinghe Had Another Round Of Discussions

பீரிஸ் வெளிநடப்பு

இதேவேளை நாளை திங்கட்கிழமை, அமைச்சரவையில் முன்வைக்க அரசாங்கம் உத்தேசித்துள்ள வரைவு வரைவு தொடர்பில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் விக்கிரமசிங்க மற்றுமொரு சுற்று கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இந்த கலந்துரையாடலில் நீதி அமைச்சரும் பங்கேற்றார். இதன்போது 21வது வரைவு தமது பொதுஜன பெரமுனவின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படவில்லை என்று அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பிரச்சினையை எழுப்பியுள்ளார்.

பின்னர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். எனினும் இது ஒரு போராட்டமா அல்லது வேறு காரணமா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

கட்சி  பிரதிநிதிகள் கூட்டத்தில் இருந்து அமைச்சர் பீரிஸ் வெளிநடப்பு..! | Wickremesinghe Had Another Round Of Discussions

மகிந்தவுக்கு அழைப்பில்லை

இதற்கிடையில் கட்சி தலைவர்களின் இந்த கூட்டத்துக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாக பிரதமரின் தரப்பில் இருந்து பதில் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் நாளை அமைச்சரவையில், சில அமைச்சர்கள் 21வது வரைவு குறித்து பிரச்சினையை எழுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US