லசந்த விக்கிரமதுங்கவின் மகள் புதிய ஜனாதிபதியிடம் விடுத்துள்ள வேண்டுகோள்
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீதிவழங்க வேண்டும் என லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையொன்றில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அதிகாரத்தின் முன்னால் உண்மையை பேசியமைக்காக 15 வருடங்களிற்கு முன் நியாயமற்ற விதத்தில் பறிக்கப்பட்ட எங்களின் தந்தைக்கு உயிருக்கு நீதியை பெற்றுக்கொள்வது குறித்து நானும் எனது குடும்பமும் தளராத உறுதியுடன் காணப்படுகின்றோம்.

உறுதியான அர்ப்பணிப்பு
15 வருடங்களாகின்ற போதிலும் அந்த வலி வேதனை தொடர்கின்றது. ஆனால் உண்மை பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவது குறித்து நான் மிகவும் உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளேன். கடந்த 15 வருடங்களாக ஆட்சியில் உள்ள அரசாங்கம் எனது தந்தையின் படுகொலை குறித்து அர்த்தபூர்வமான நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டது.
இது நாட்டில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளது. நேற்றைய தேர்தல் முடிவுகள் எனது நம்பிக்கையை புதுப்பித்துள்ளன. ஜே.வி.பி வரலாற்று ரீதியில் அதிகார வர்க்கத்தினை கடுமையாக விமர்சித்து வந்துள்ளது.
இலங்கையின் சமீபத்தைய மனித உரிமை வரலாற்றில் இடம்பெற்ற அநீதிகளிற்கு தீர்வை காண்பதில் இந்த புதிய தலைமைத்துவம் புதிய நோக்கத்தினை கொண்டுவரும் என நான் நம்புகின்றேன்.

அர்த்தபூர்வமான நடவடிக்கை
எங்களின் துணிச்சலான திறமை மிக்க சிஐடி அதிகாரிகள் சானி அபயசேகர, நிசாந்த டி சில்வா போன்றவர்களிடம் பெருமளவு ஆதாரங்கள் காணப்பட்ட போதிலும், கடந்த 15 வருடங்களாக ஆட்சியில் உள்ள அரசாங்கம் எனது தந்தையின் படுகொலை குறித்து அர்த்தபூர்வமான நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டது.
மக்கள் தங்கள் எண்ணத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள், ராஜபக்சவின் பயங்கர ஆட்சியின் கீழ் பயங்கரமான இழப்புகளை சந்தித்த எனது தந்தைக்கும் ஏனைய குடும்பங்களிற்கும் நீதியை வழங்குவேன் என உறுதியளித்துள்ள அநுரகுமார திசாநாயக்கவை நாங்கள் வாழ்த்துக்கின்றோம்.

இலங்கையில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுவதற்காக நாங்கள் இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட ஆர்வமாகவுள்ளோம்.
நீதிக்கான பாதை நீண்டமானது கடினமானது என்ற போதிலும் எனது தந்தைக்கான எனது போராட்டத்தில் அவரது பாரம்பரியத்தை கௌரவிப்பதில் நான் உறுதியாகயிருக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri