ரணில் விக்ரமசிங்க எப்போதும் தேர்தலுக்கு அஞ்சுபவர்-சமிந்த விஜேசிறி
ரணில் விக்ரமசிங்க அன்றும் இன்றும் என்றும் தேர்தல்களுக்கு அஞ்சும் நபர் எனவும் தேர்தலை நடத்தாததன் மூலம் தான் மற்றும் மொட்டுக்கட்சியினரின் வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என கனவு கண்டுக்கொண்டிருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தேர்தலை ஒத்திவைப்பதால் படுதோல்வியடைவார்கள்

தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் அவர்களால் வெற்றி பெற முடியாது என்பதுடன் அது அவர்களின் படுதோல்வியாக அமையும். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தொகுதிவாரி முறைமையை உருவாக்கியவர் பசில் ராஜபக்ச.
அதன் மூலம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அறிந்தும் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தியது ரணில் விக்ரமசிங்கவின் நல்லாட்சி அரசாங்கம். ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே மக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டார்.
பழைய முறையில் தேர்தலை நடத்தலாம்

இதனால், மக்கள் தமக்கு தேவையான ஜனநாயக ரீயாக தாம் விரும்பு நிர்வாகத்தை ஏற்படுத்த தேர்தலை நடத்த வேண்டும். அதேபோல் பழைய முறையில் தேர்தலை நடத்தினால், பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் குறையும். அந்த யோசனையை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்தால், பழைய முறையில் தேர்தலை நடத்தி முடியும்.
அப்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கும் தேர்தலை எந்த சிரமமும் இன்றி நடத்த முடியும் எனவும் சமிந்த விஜேசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15