பிள்ளையானுக்கு எதற்காக ஆயுதம் வழங்கப்பட்டது: கேள்வியெழுப்பிய முரளிதரன்
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் (LTTE ) இருந்து பிரிந்த பின்பு பிள்ளையானுக்கு எதற்கு ஆயுதம் தேவைப்பட்டது ஜேவிபியினர் எதற்காக அவருக்கு ஆயுதம் வழங்கினார் என விசாரிக்க வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கேள்வியெழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இந்த ஆயுதங்கள் யாருக்காக பயன்படுத்தப்பட்டது இடைக்காலங்களில் பல கொலை சம்பவங்கள் இடம் பெற்றது இவை ஜேவிபியினரால் வழங்கப்பட்ட ஆயுதத்தால் இடம் பெற்றதா என இரு தரப்பையும் தீர விசாரிக்க வேண்டும்.
இந்நிலையில், கிழக்கில் ஆயுதக் குழுக்கள் தற்போதும் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதியாக தான் தெரிவு செய்யப்பட்ட பின்பு இவை அனைத்தும் கலையப்படும் என்றும் ஜேவிபியின் தலைவர் தெரிவித்திருந்தார்.
எனினும். இதற்கு பதில் அளித்த பிள்ளையான் ஜேவிபியினர் தான் தமக்கு ஆயுதம் வழங்கியதாகவும் அவர் வெற்றி பெற்ற பின் அவைகளை தேடிப் பார்க்கவும் என ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் சிரேஷ்ட முன்னாள் தலைவர் என்ற வகையில் இதன் உண்மைத்தன்மை என்ன ஆராய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
