ஒத்திவைக்கப்பட்டது கூட்டமைப்பின் இந்திய பயணம்! காரணம் என்ன? செய்திகளின் தொகுப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களது இந்தியப் பயணம், பிற்போடப்பட்டமைக்கு இலங்கையின் நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமையும் ஒரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் எமது செய்திப் பிரிவுக்குத் தகவல் வழங்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனைவிடத் தனிப்பட்ட காரணங்களும் இதில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரிலேயே இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் இந்த பயணத்துக்கான வாய்ப்பு குறித்துத் தெரிவிக்குமாறு இந்தியப் பிரதமர் தரப்பு கேட்டிருந்தது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
பெரும் நெருக்கடி நிலையால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் - அமைச்சர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
விறகு சேகரிக்க காட்டுக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : தேடிச் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி