ஜனாதிபதி அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியது ஏன்? அமைச்சர் வெளியிட்ட தகவல்
நாட்டில் எந்த வகையிலும் உணவு பற்றாக்குறை ஏற்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“அவசரகால சட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இங்கு உணவு தட்டுப்பாடு இல்லை மாறாக உணவு மாஃபியா உள்ளது.
இதனால் உணவு பதுக்களை தடுப்பதற்கே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவசரகால சட்டத்தை கொண்டுவந்துள்ளார். நாட்டில் உணவு தட்டுப்பாடு இல்லை என்பதை விவசாய அமைச்சராக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
நாட்டு மக்களுக்க உணவளிப்பதில் எவ்வித தட்டுப்பாடும் இல்லையென” அவர் மேலும் கூறியுள்ளார்.