அமெரிக்கா தாக்குதலை உறுதிப்படுத்தியும் இலங்கை மௌனம் காப்பது ஏன்...! நாடாளுமன்றில் சஜித் கேள்வி
காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40-44 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த ஈரான் கப்பல், வெளிநாட்டு அரசொன்றின் தலையீட்டினால் ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரே இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு அத்தகைய சம்பவம் நடக்கவில்லை எனக் கூறுவது வியப்பளிக்கின்றது என சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் கடல் எல்லைக்குள்
இன்று(05.03.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் இறையாண்மை தொடர்பான பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.

இலங்கைக் கடற்பரப்புக்கு அண்மையில் நேற்று ஈரான் கப்பல் ஒன்றின் மீது வெளிநாட்டு அரசொன்றினால் 'டார்பிடோ' ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டு அது மூழ்கடிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் குறித்து அரசு உடனடியாக உத்தியோகபூர்வ விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தத் தாக்குதல் இலங்கையின் கடல் எல்லைக்குள்ளோ அல்லது பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்துக்குள்ளோ இடம்பெற்றதா என்பது குறித்து அரசு மௌனம் காப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு குறித்துப் பாடம் எடுப்பதாகக் கூறும் அமைச்சர்கள், எமது கடல் எல்லையில் நடக்கும் இவ்வாறான பாரிய அனர்த்தங்களை அறியாமல் இருப்பது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலானது என்றும் அவர் சாடியுள்ளார்.
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam