கோவிட் தடுப்பூசி வழங்குவதில் வவுனியா புறக்கணிக்கப்பட காரணம் என்ன?
கோவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியா மாவட்டம் புறக்கணிக்கப்படக் காரணம் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் கோவிட் மரணம் அதிகமாகப் பதிவான மாவட்டமாக யாழ்ப்பாணமும், வவுனியாவும் காணப்படுகின்றது.
மக்கள் தொகையின் அடிப்படையில் வவுனியா மாவட்டம் ஆபத்தான பிரதேசமாக வட மாகாணத்தில் காணப்படும் நிலையில் வவுனியாவிற்குத் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை.
திங்கட்கிழமை முதல் வட மாகாணத்தில் வவுனியா தவிர்ந்த அனைத்து மாவட்டத்திலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வவுனியா மாவட்ட சுகாதார திணைக்கள அதிகாரிகள் அசமந்தமாக செயற்படுகின்றமை தான் வவுனியா மாவட்டம் புறக்கணிக்கப்படக் காரணமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
சுகாதார செயற்பாடுகள் தொடர்பாகவும் கோவிட் தடுப்பூசி தொடர்பாகவும் கோவிட் செயலணிக்கு போதுமான தகவல்களை வழங்காமை மற்றும் உயர் இடங்களில் அழுத்தம் பிரயோகித்து காரியங்களைச் சாதிக்கும் தகுதியின்மை போன்றவையே இவ்வாறான நிலைக்குக் காரணமாக அமைகின்றதா என்ற பலத்த சந்தேகமும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

பிரித்தானியாவில் துப்பாக்கி மூலம் குடும்பத்தை அச்சுறுத்திய நபர்: 4 மணிநேர போராட்டத்தில் சுட்டுப்பிடிப்பு News Lankasri

Bigg boss 9 elimination: முதல் வாரமே வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
