தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி : தாக்கம் செலுத்தும் காரணிகள்
தேங்காய் உற்பத்தி வீழ்ச்சிக்கு செய்கையாளர்களின் பராமரிப்பு இன்மையும் ஒரு காரணம் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பதில் பிராந்திய முகாமையாளர் ஈஸ்வரன் சற்குணன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில்(Kilinochchi) இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேங்காய் உற்பத்தி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேங்காய் விலை அதிகரிப்புக்கு பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன.

தென்னைக்கு ஒவ்வொரு வருடமும் பசளையிட வேண்டும் இரசாயன பசளை கடந்த இரண்டு வருடங்களாக தடைப்பட்டிருந்தது. இதனால் பெருமளவு செய்கையாளர்கள் பசளை விநியோகத்தை மேற்கொள்ளவில்லை.
மேலும், பீடைகளின் தாக்கமும் காரணமாக விளங்குகின்றதோடு தென்னைக்கு தொடர்ந்து நீர் விநியோகம் செய்ய வேண்டும். சிலர் நான்கு ஐந்து வருடங்களோடு நீர் விநியோகத்தை நிறுத்துகின்றனர்.
இவ்வாறான சிறந்த பராமரிப்பு இன்மையும் தென்னை உற்பத்தியின் வீழ்ச்சிக்கும் விலை அதிகரிப்புக்கும் காரணம் எனவும், செய்கையாளர்கள் சரியான முறையில் பசளை மற்றும் நீர் விநியோகங்களை மேற்கொள்கின்ற போது உற்பத்தியை அதிகரிக்க முடியும் என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri