சடலத்தை அடையாளம் காண உதவி கோரும் பொலிசார்
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்னால் யாசகரொருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சடலம் நேற்று (02) மாலை மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள கோயிலுக்கு அருகில் யாசகம் எடுத்து ஜீவியத்தை கழித்து வந்த குறித்த வயோதிபர் மயக்கமுற்ற நிலையில் விழுந்து கிடந்ததாகவும் இதனை அடுத்து வைத்தியசாலை காவலாளிகள் சென்று பார்வையிட்டபோது உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டதாகவும் அதன்பின்னர் பொலிசாருக்கு தெரிய படுத்தியதாகவும் தெரியவருகின்றது.
குறித்த சடலத்தை திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ எஸ்.எம். ரூமி பார்வையிட்டதுடன் துறைமுக பொலிஸார் சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று கோவிட் பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.
இந்நிலையில் இவருக்கு கோவிட் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்
இவர் எப்பகுதியைச் சேர்ந்தவர் என தெரியாத நிலையில், இவர் பற்றிய விவரங்கள் தெரிந்தால்
வைத்தியசாலை பொலிஸாருக்கோ 0262222261 அல்லது துறை முக பொலிஸ் நிலையத்திற்கோ
0262222308 தெரியப்படுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை
விடுத்துள்ளனர்.



