உலகின் பல நாடுகளில் மீண்டும் தொற்று நோய் பரவல் ஆரம்பம்
சுவாச அமைப்புடன் தொடர்புடைய தொற்று நோயான கக்குவான் இருமல் (Whooping cough) உலகின் பல நாடுகளில் மீண்டும் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகம் முழுவதும் வருடந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கக்குவான் இருமல்(Whooping cough) நோயால் பாதிக்கப்பட்டு இறப்புகள் பதிவாகி வருகின்ற போதிலும், இந்த ஆண்டு அது அதிகரிப்பை காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கக்குவான் இருமல்
குறிப்பாக சீனா(China), பிலிப்பைன்ஸ்(Philippines), நெதர்லாந்து(Netherland), அமெரிக்கா(America) மற்றும் இங்கிலாந்து(England) ஆகிய நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் சீனாவில் இருந்து 32,380 பேர் கக்குவான் இருமல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 13 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 20 வீத அதிகரிப்பு என சீன அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டை விட பிலிப்பைன்ஸில் கக்குவான் இருமல் நோயாளிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |