ஒரு சிறு குழுவை ஆறுதல்படுத்தியதால் இன்று முழு நாடும் அழிவு: கோட்டா அரசை சாடுகின்றார் சஜித்
"கோட்டாபய அரசு ஆட்சிக்கு வந்தவுடனேயே 600 மில்லியன் ரூபா வரிச்சலுகையை வழங்கியதன் மூலம் ஒரு சிறு குழுவினர் ஆறுதல் அடைந்தது எனவும், அதன் விளைவாக இன்று முழு நாடும் அழிந்துள்ளது" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (30) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை
இந்தக் கலந்துரையாடல் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இடம்பெற்றது.
இந்நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பாக இரண்டரை வருடங்களாக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் எழுப்பியதாக இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
இந்தச் சந்திப்பில் சிறிய மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கவனத்தில்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு உதவி செய்ய பிரித்தானிய பிரதமர் இணக்கம்! ரணில் வெளியிட்டுள்ள தகவல் |

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய பிரபலங்கள் மாற்றம்.. யார் யார் தெரியுமா? Cineulagam
